×

திருமண விசேஷங்கள் முடிந்ததால் புஞ்சை புளியம்பட்டி சந்தையில் பூவன் ரக வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி

சத்தியமங்கலம் : திருமண விசேஷங்கள் முடிந்ததால் புஞ்சை புளியம்பட்டி சந்தையில் பூவன் ரக வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரச்சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூவன், நேந்திரன், கதலி, ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு ரக வாழை தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரங்களில் பெய்த மழை காரணமாக சந்தையில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

இதையடுத்து, ஐப்பசி மாதம் முகூர்த்த சீசன் என்பதால் வாழைப் பழங்களின் தேவை அதிகரித்து பூவன் ரக வாழைத்தார் ஒன்று ரூ.600  வரை விலை உயர்ந்து விற்பனையானது. இந்நிலையில், திருமண விசேஷங்கள் முடிவடைந்ததால் பூவன் ரக வாழைத்தார் ஒன்று ரூ.200  என விலை சரிந்து விற்பனையானது. கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் கார்த்திகை விரதம் துவங்குவர் என்பதால் வாழைத்தார் விற்பனை நன்றாக இருக்கும்.

 இதனை கருத்தில் கொண்டு நேற்று கூடிய புஞ்சை புளியம்பட்டி சந்தைக்கு 1000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். கடந்தவாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார் 600 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது கடுமையாக சரிந்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.

திருமண சீசன் முடிந்தாலும் கார்த்திகை மாதம் விரதம் துவங்கியுள்ளதால் வாழைத்தார் விற்பனை நன்றாக இருக்கும் என கருதிய வியாபாரிகள் வாழைத்தார் விற்பனையாகாததால் வேதனை அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், மோகனூர், பரமத்தி வேலூர்,கொடுமுடி ஆகிய பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தார்களை வாங்கி வருவதாகவும், ஒரு தார் 15 கிலோ முதல் 18 கிலோ வரை எடை கிடைக்கும்.

ஒரு தாரில் 140 பழங்கள் முதல் 160 பழங்கள் வரை இருக்கும் எனவும் கடந்த வாரம் 600 ரூபாய்க்கு விற்ற பூவன் ரக வாழைத்தார் இந்தவாரம் 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. முகூர்த்த சீசன் முடிந்தாலும் கார்த்திகை மாதம் துவங்கி உள்ளதால் வியாபாரம் நன்றாக இருக்கும் என கருதி வாழைத்தார்களை கொண்டு வந்ததாகவும், ஆனால் விலை
கடும் வீழ்ச்சி அடைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

Tags : Punjai Puliambatti , Sathyamangalam: Due to the completion of wedding specials, the price of Bhuvan banana in Punjai Puliambatti market has fallen sharply.
× RELATED புஞ்சை புளியம்பட்டியில் தரமற்ற மக்காச்சோள விதையால் விளைச்சல் பாதிப்பு